டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 35.47 கோடி ரூபாய் அபராதம்.. தலை சுற்ற வைக்கும் தெற்கு ரயில்வே.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 10:35 AM IST
Highlights

குறிப்பாக பொதுப்போக்குவரத்தின் ஆணி வேராக உள்ள ரயில்வேயில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணித்த பயணிகள் மற்றும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளிடம் இருந்து 35.47  கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்களிடமிருந்து மட்டும் 1.62 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்:  16 ஆம் தேதி ஜெ சமாதியில் எடப்பாடியை அலறவிடப்போகும் சசி... பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

குறிப்பாக பொதுப்போக்குவரத்தின் ஆணி வேராக உள்ள ரயில்வேயில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத பயணிகள் மற்றும் டிக்கட் இல்லாமல் ரயிலில் பயணம்  செய்தா பயணிகளிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் புறநகர் மற்றும் விரைவு ரயில்வே நிலையங்களில், தெற்கு ரயில்வே டிக்கெட் பரிசோதனையில் முறையாக டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பயணித்தவர்களிடமிருந்து 35.47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ரோந்து சென்றபோது விபத்தில் காயமடைந்த காவலர்.. ஓடோடி சென்று சைக்கிள் வழங்கிய காவல் ஆணையர்.

டிக்கெட் இல்லாத பயணம் மற்றும் முன்பதிவு செய்யாமல் அதிக லக்கேஜ்களுடன் பயணித்தவர்கள் என 7.12 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 37 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் முதல் நேற்று வரையில் சென்னையில் மட்டும் 2.78 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 6.05 கோடியும், பாலக்காடு டிக்கெட் சோதனை அபராதம் 5.52 கோடி ரூபாயும்,  மதுரை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி பிரிவுகளில் டிக்கெட் சோதனை வருவாய் 4.16 கோடி ரூபாயும், இதில் முகக் கவசம் அணியாமல் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த 32 ஆயிரத்து 624 பேரிடம் மட்டும் இதுவரை 1.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

 

click me!