16 ஆம் தேதி ஜெ சமாதியில் எடப்பாடியை அலறவிடப்போகும் சசி... பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 9:56 AM IST
Highlights

இந்தமுறை சசிகலாவின் செயல்பாடு அதிமுகவில் மிகப்பெரிய தாக்கத்தையுப், விளைவுகளையும் ஏற்படுத்தும் என சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு  தான் செல்ல உள்ளதற்கு பாதுகாப்பு கேட்டு, சசிகலா தரப்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு  கொடுக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு அவரது தோழி சசிகலா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அவர் 16ஆம் தேதி ஜெயலிதா சமாதியில் தியானம் செய்யப் போவதாகவும், அப்போது தனது ஆதரவாளர்களை சந்திக்கப் போவதாகவும் கூறப்படும் நிலையில், பாதுகாப்பு கேட்டு இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சசிகலா மற்றும் தினகரன் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா, அவர் சிறைக்கு சென்ற கையோடு எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் கைகோர்த்ததுடன், முழு அதிமுகவும் தங்களுக்கு சொந்தம் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. 

இதையும் படியுங்கள்: மோடிக்கு எதிராக மாநில முதல்வர்களை அணி திரட்டும் ஸ்டாலின்..தெலங்கானாவுக்கு தூது சென்ற திமுக முக்கிய எம்.பி.

இந்நிலையில் சிறையில் இருந்து வந்த உடனே அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார் என்றும், அல்லது அதிமுகவில் சசிகலா இணைந்து செயல்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விவகாரம் தலைகீழாக மாறியது. அதிமுகவில் இணையவோ அல்லது கட்சியை கைப்பற்றவோ அவர் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, அதேபோல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கட்சிக்கு இடையூறின்றி விலகி இருப்பதாக அவரே அறிவித்தார், அப்போதும்  அதிமுகவில் இணைவது என்ற அவரின் முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனியும் அதிமுக சீரழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, விரைவில் வரப்போகிறேன் என சசிகலா கூறியதாக தகவல் வெளியானது. எனவே வரும் 16 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு இடங்களுக்கு சசிகலா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அவரை சந்திக்கப் போவதாகவும்,  அன்று முதல் அவர் கட்சித் தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்:  ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் திமுகவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்துள்ளது. மார்த்தட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதேபோல வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பு, 16 ஆம் தேதியே சசிகலா எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்லவுள்ளது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தமுறை சசிகலாவின் செயல்பாடு அதிமுகவில் மிகப்பெரிய தாக்கத்தையுப், விளைவுகளையும் ஏற்படுத்தும் என சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு  தான் செல்ல உள்ளதற்கு பாதுகாப்பு கேட்டு, சசிகலா தரப்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு  கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியில் வந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், அவர் மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரின் இந்த நடவடிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

click me!