ரோந்து சென்றபோது விபத்தில் காயமடைந்த காவலர்.. ஓடோடி சென்று சைக்கிள் வழங்கிய காவல் ஆணையர்.

Published : Oct 14, 2021, 09:23 AM ISTUpdated : Oct 14, 2021, 10:02 AM IST
ரோந்து சென்றபோது விபத்தில் காயமடைந்த காவலர்.. ஓடோடி சென்று சைக்கிள் வழங்கிய காவல் ஆணையர்.

சுருக்கம்

பணியின் போது விபத்தில் காயமடைந்த காவலரின் வீட்டிற்கே நேரில் சென்ற சென்னை மாநகர காவல் ஆணையர், அவரை நலம் விசாரித்ததுடன், சைக்கிள் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.  

பணியின் போது விபத்தில் காயமடைந்த காவலரின் வீட்டிற்கே நேரில் சென்ற சென்னை மாநகர காவல் ஆணையர், அவரை நலம் விசாரித்ததுடன், சைக்கிள் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை  காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் செந்தில்குமார். இவர் தேனாம்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அன்றாடம் சைக்கிளில் ரோந்து பணிமேற்கொண்டு  வருகிறார். 

இந்நிலையில் நேற்று பிற்பகல் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் தலைமை காவலர் செந்தில்குமார் மீது வேகமாக மோதியது, இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தெரிந்தது, இந்நிலையில் செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:  16 ஆம் தேதி ஜெ சமாதியில் எடப்பாடியை அலறவிடப்போகும் சசி... பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

இதையும் படியுங்கள்:  என்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யுங்கள்.. இன்னும் ஏன் எச்.ராஜாவை கைது செய்யவில்லை. சீமான் ஆவேசம்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆலந்தூர்  எம்.கே.என் சாலையில் உள்ள செந்தில்குமார் வசித்துவரும் காவலர் குடியிருப்புகள் சென்று, செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சைக்கிளில் ரோந்து சென்று விபத்து சந்தித்த செந்தில்குமாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்தார்.  மநாகர காவல் ஆணையரின் இந்த நடவடிக்கை காவலர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!