இலங்கையின் பிரதமரான ராஜபக்சே வீட்டில் நடைபெற்ற பூஜையில் பாஜக முக்கிய தலைவரான சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
இலங்கையின் பிரதமரான ராஜபக்சே வீட்டில் நடைபெற்ற பூஜையில் பாஜக முக்கிய தலைவரான சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி இலங்கை சென்றிருக்கிறார். அவருக்கு அந்நாட்டின் அமைச்சர்கள், உற்சாகமாக வரவேற்பு தந்தனர்.
இந் நிலையில் அந்நாட்டு பிரதமரான மகிந்த ராஜபக்சேயின் அலரி மாளிகையில் நவராத்திரி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொண்டார். இது குறித்து டுவிட்டரில் இலங்கை பிரதமர் ராஜபக்சே ஒரு பதிவை வெளியிட்டு சில போட்டோக்களையும் ரிலீஸ் செய்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: நீண்ட கால நண்பர் சுப்ரமணியன் சுவாமியுடன் நவராத்திரியை கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பான, வளமான நவராத்திரயாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராஜபக்சே வீட்டில் நிகழ்ந்த இந்த பூஜையில் பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.