துர்காதேவி ஆசி எல்லாருக்கும் இருக்கட்டும்… பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து

Published : Oct 14, 2021, 08:37 AM IST
துர்காதேவி ஆசி எல்லாருக்கும் இருக்கட்டும்… பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து

சுருக்கம்

துர்காதேவியின் ஆசி இருக்கட்டும் என்று பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி:துர்காதேவியின் ஆசி இருக்கட்டும் என்று பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டு உள்ள தமது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளதாவது:  அநீதியை அழித்ததன் அடையாளமான துர்கா பெண் சக்தியின் கடவுள் வடிவம். பெண்களுக்கு சமமான பங்களிப்பை உருவாக்க நாம் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல உடல்நிலை, மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை அமைய துர்காதேவியை பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் துர்கா தேவியின் ஆசி எப்போதும் இருக்கட்டும். அனைத்து மக்களின் வாழ்க்கையும் ஒளி பெற வாழ்த்துவதாக தெரிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!