‘பிச்சுக்கிட்டு’ போன பெட்ரோல் விலை… ஆயுத பூஜை தினத்தில் மக்கள் அதிர்ச்சி

Published : Oct 14, 2021, 07:55 AM IST
‘பிச்சுக்கிட்டு’ போன பெட்ரோல் விலை… ஆயுத பூஜை தினத்தில் மக்கள் அதிர்ச்சி

சுருக்கம்

பெட்ரோல், டீசல் முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்திருப்பது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை: பெட்ரோல், டீசல் முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்திருப்பது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

நாடு முழுவதும் அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் வரலாறு காணாத விலையில் உயர்ந்து வருகிறது. திடீர், திடீர் என அதன் விலை உயர்ருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந் நிலையின் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் எகிறி மக்களை அதிர வைத்துள்ளது.

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.10 காசுகளாக உள்ளது. பெட்ரோல் விலை 102 ரூபாயை கடந்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

டீசல் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ.97.93 காசுகளாக உள்ளது. இன்று புதிய விலைகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடரும் இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!