மருத்துவமனையில் மன்மோகன் சிங்… எய்ம்ஸ் சொன்ன ‘முக்கிய’ விஷயம்… காங்கிரஸ் பிரார்த்தனை

Published : Oct 14, 2021, 07:33 AM IST
மருத்துவமனையில் மன்மோகன் சிங்… எய்ம்ஸ் சொன்ன ‘முக்கிய’ விஷயம்… காங்கிரஸ் பிரார்த்தனை

சுருக்கம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்..

மன்மோகன் விரைவில் குணம் அடைய வேண்டும் என நாடே பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளது. அவரது உடல்நிலை சரியாக வேண்டும் என்று கடவுளை வேண்டுவதாக பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.

இந்நிலையில் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 10 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!