மோசடி செயல்கள் மூலம் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ...

 
Published : Dec 23, 2017, 07:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
மோசடி செயல்கள் மூலம் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ...

சுருக்கம்

seveteen thousands rupees crore loss to banks through fraudulent actions

மோசடி செயல்கள் மூலம் கடந்த நிதி ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்து மத்திய நிதித் துறை இணைஅமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா நேற்று பேசியதாவது-

ரிசர்வ் வங்கி சமீபத்தில் அளித்த அறிக்கையின்படி, பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், குறிப்பிடப்பட்ட நிதி நிறுவனங்கள் மோசடிகளை கண்காணித்து அளித்த அறிக்கையின்படி, கடந்த 2016-17ம் நிதிஆண்டில், மோசடி நடவடிக்கைகள் மூலம் ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடிகளை கண்காணிக்க ரிசர்வ் வங்கி சார்பில் ஒழுங்கு முறைக் குழு அமைக்கப்ட்டுள்ளது. இந்த குழுவில் சைபர் செக்யூரிட்டி, தடயவியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். வங்கிகளில் நடக்கும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி ஆகியவை மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.65.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிதிஆண்டின் முதல் பாதிவரை நாட்டில் 393 திருட்டு, கொள்கை, வழிப்பறி சம்பவங்கள் நடந்த அதன் மூலம் ரூ.18.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கிக்கிளைகள், ஏ.டி.எம்.களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும், மற்றொரு கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்து பேசுகையில் “ ரிசர்வ் வங்கி புதியதாக வெளியிட்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகள் கடந்த காலங்களில் பிடிபட்டுள்ளன. ஆனால், ்வரை அனைத்தும் ஸ்கேன் செய்தும், ஜெராக்ஸ் செய்தும் இருந்தன. ஆனால், ரூபாய் நோட்டுகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்களால் அதை கள்ளநோட்டாக அச்சடிக்க முடியவில்லை’’ என்றார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!