மதரீதியான மோதலை உருவாக்கினால் கடும் நடவடிக்கை.. கெத்தாக வெளியே வந்து கர்ஜித்த அமைச்சர் சி.வி.சண்முகம்..!

By vinoth kumarFirst Published Jul 15, 2020, 1:19 PM IST
Highlights

தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைபிடித்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைபிடித்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆபாசமாகவும், இந்து மதத்தையும் அசிங்கப்படுத்தியும் வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்துமத தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. 

எனவே இந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்திர நடராஜன் மற்றும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று கூறி காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம்;- தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைபிடித்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சமூக வலைத்தளங்களில் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பதிவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர் நாட்டை காட்டி கொடுக்கின்ற கைக்கூலிகள்.  கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதனிடையே அமைச்சரின் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் கெத்தாக வந்து ரூ.33 கோடியில் புதிய தடுப்பணைக்கு அமைச்சர் சண்முகம் அடிக்கல் நாட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

click me!