Breaking:பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கை.. பிரதமர் மோடி அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2021, 12:39 PM IST
Highlights

இந்நிலையில் கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர்,  சமூக சீர்திருத்தவாதி, இதழியலாளர் என பன்முகத்தன்மை கொண்ட பாரதி தன் எழுத்தால், கவியால் மக்கள் மனதில் விடுதலை வேட்கையை ஊட்டியவர், 

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதியார் கல்விபயின்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கையை நிறுவ முடிவு செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நூறாவது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி தினமாக அரசால் கடைபிடிக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

आज इस अवसर पर मैं एक महत्वपूर्ण घोषणा भी कर रहा हूं।

बनारस हिंदू यूनिवर्सिटी में सुब्रमण्य भारती जी के नाम से एक Chair स्थापित करने का निर्णय लिया गया है।

Tamil Studies पर ‘सुब्रमण्य भारती चेयर’ BHU के फेकल्टी ऑफ आर्ट्स में स्थापित होगी: PM

— PMO India (@PMOIndia)

இந்நிலையில் கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர்,  சமூக சீர்திருத்தவாதி, இதழியலாளர் என பன்முகத்தன்மை கொண்ட பாரதி தன் எழுத்தால், கவியால் மக்கள் மனதில் விடுதலை வேட்கையை ஊட்டியவர், உறங்கிக் கிடந்த மக்களை இந்திய சுதந்திரத்திற்கு போராட தூண்டியவர், அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாரதியில் நூறாவது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் மோடி சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் நூறாவது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், அவரது பெரும்புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முக பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம் என பதிவிட்டிருந்தார். 

உத்திரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதி வழங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியும் தன் பங்கிற்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, இந்த சந்தர்ப்பத்தில் இன்று நானும் மகாகவி பாரதியாரின் நினைவு விஷயத்தில்முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தனி இருக்கை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எச்.யு கலை பீடத்தில் தமிழ் ஆய்வுகள் குறித்த சுப்ரமணி பாரதி இருக்கை நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பாரதி இருக்கை பயன்படும் என்று மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு, தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன்,  தமிழர்களுக்கும், நம் மகாகவி பாரதிக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. 

click me!