அய்யய்யோ மக்களே.. இன்னும் இந்த கொடூரம் நம்மளவிட்டு போகல.. தயவு செய்து இதை செய்யாதிங்க.. அலறும் ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2021, 11:33 AM IST
Highlights

கடந்த 5 நாட்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாவட்டங்களில் அதன் விழுக்காடு 2 சதவீதமாக உள்ளது, இன்னும் கொரோனா நம்மைவிட்டு போகவில்லை, தேவையற்ற பயணங்கள் மற்றும் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா இன்னும் போகவில்லை என்றும், கடந்த 5 நாட்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். எனவே மக்கள் தேவையற்ற பயணங்களை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

தென் இந்தியாவை பொருத்தவரையில் கேரளா கொரோனா வைரஸ் முதல் அலையை சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினாலும்கூட இரண்டாவது அலை மற்றும் அதைத் தொடர்ந்து தற்போது அங்கு வைரஸ் தொற்றின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் 3வது அலை ஏற்படக்கூடும்  என்பதால், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் போன்றவற்றுக்கு தடை விதித்து மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என்பதால், தமிழகத்தில் நாளை சுமார் 10,000 தடுப்பூசி முகாம்கள் அமைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை  நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, மக்கள் தேவைக்கு ஏற்ப முகாம்கள் அமைத்துள்ளோம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த முகாம்களில் செயல்படும். தற்போது 2000 முகாம்களில் இருக்கும் நிலையில் 40 ஆயிரம் முகாம்கள் நாளை நடைபெற உள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வாகையில் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் 45 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது அரசின் கையிருப்பில் 30 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன.  கடந்த 5 நாட்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாவட்டங்களில் அதன் விழுக்காடு 2 சதவீதமாக உள்ளது, இன்னும் கொரோனா நம்மைவிட்டு போகவில்லை, தேவையற்ற பயணங்கள் மற்றும் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!