தொழுகை முடித்துவிட்டு வந்தபோது கொடூரம்.. துடிக்க துடிக்க தலையை துண்டித்த கும்பல்.. வாணியம்பாடியில் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2021, 10:29 AM IST
Highlights

அவர் இறந்து விட்டார் என்பது தெரிந்தும் கொலைவெறி அடங்காத அந்த கும்பல் அவரது தலையை துண்டாக எடுத்தது. வசீம் அக்ரம் கொலை நடந்த இடத்திற்கு வேகமாக ஒரு கார் வந்தது, அந்த காரில் ஏறி அந்த 6 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. 

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில பொறுப்பாளராக இருந்துவந்த வசீம் அக்ரம் என்பவர் தொழுகைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது அவரை வழிமறித்த 6 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது இச்சம்பவம் வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில பொறுப்பாளராக இருந்தவர் வசிம் அக்ரம், இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். அதேபோல வாணியம்பாடி இஸ்லாமிய கூட்டியக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார், இந்நிலையில் நேற்று இவர் தனது 7 வயது மகனுடன் அருகில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் வாசிம் அக்ரமை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. 

அவர் இறந்து விட்டார் என்பது தெரிந்தும் கொலைவெறி அடங்காத அந்த கும்பல் அவரது தலையை துண்டாக எடுத்தது. வசீம் அக்ரம் கொலை நடந்த இடத்திற்கு வேகமாக ஒரு கார் வந்தது, அந்த காரில் ஏறி அந்த 6 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இந்த கொலை சம்பவம் வாணியம்பாடியில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இந்த கொலையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழுன் அன்சாரி கண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- 

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அவர்கள் கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர்.மஜக வின்  பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும்  எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!