உடனடி பதிலடி.! உஷாராகும் மு.க.ஸ்டாலின்..! ஆளுநராக வி.என்.ரவி நியமனம்..! பின்னணி என்ன?

By Selva Kathir  |  First Published Sep 11, 2021, 10:09 AM IST

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக தற்போது நாடு முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது. அப்போது கடுமையாக எதிர்ப்பு காட்டிய இஸ்லாமிய கட்சிகள் கூட சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டன. ஆனால் திடீரென தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மறுபடியும் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ஸ்டாலின்.


மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களுக்குள் புதிய ஆளுநரை நியமித்து அதிரடி காட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக தற்போது நாடு முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது. அப்போது கடுமையாக எதிர்ப்பு காட்டிய இஸ்லாமிய கட்சிகள் கூட சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டன. ஆனால் திடீரென தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மறுபடியும் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ஸ்டாலின்.

Tap to resize

Latest Videos

undefined

இப்படி ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதுமே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உளவுத்துறை மூலமாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் நீட்சியாக மறுபடியும் நாட்டில் எங்கும் போராட்டங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய இந்த தீர்மானம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடும் அதிருப்தி அடைய வைத்ததாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து மேல் மட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைகளை தொடர்ந்து ஆர்.என்.ரவி பெயரை மோடி டிக் அடித்ததாக சொல்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த 2012ம் ஆண்டோடு பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால் கடந்த 2014ம் ஆண்டு மோடி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்ற போது பிரதமர் அலுவலகத்தில் உளவுத்துறைக்கு என்று ஜாய்ன்ட் டீம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த டீமுக்கு ஆர்.என்.ரவியைத் தான் பிரதமர் தலைவராக நியமித்தார். இதன் பிறகு நாகலாந்து வன்முறையை கட்டுக்குள் கொண்ட வரும் பணியை சிறப்பாக செய்த காரணத்தினால் அவரை நாகலாந்து ஆளுநராக மோடி நியமித்தார். ஐபிஎஸ் அதிகாரியான அவரை தற்போது தமிழகத்திற்கு ஆளுநராக அனுப்பியுள்ளார் மோடி.

இரண்டு வருடங்களாக நாகலாந்தில் ஆளுநராக இருந்த போது அங்கு அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளில் ஆர்.என்.ரவி ஈடுபாடு காட்டியுள்ளார். அதிலும் நாகலாந்து தனி நாடு கோரிக்கையை முன் வைத்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி வைத்தியங்களை ரவி கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் சர்ச்சைக்குரிய மற்றும் பதற்றமான பகுதிகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி ரவி ஆய்வுக்கு சென்று வந்ததாகவும் செல்கிறார்கள். மேலும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறிப்பாக காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை நேரடியாகவே ரவி கண்காணித்ததாக கூறுகிறார்கள்.

இப்படி ஒரு பின்புலம் உள்ள ரவியைத்தான் தமிழக ஆளுநராக நியமித்துள்ளார் மோடி. இதன் மூலம தமிழகத்திலும் இனி அடிக்கடி ஆளுநரின் ஆய்வுப்பணிகளை பார்க்க முடியும் என்கிறார்கள். மேலும் ரவி, ஒரு அரசியல்வாதி இல்லை என்பதால் அவருடன் அரசியல் ரீதியாக டீலிங் செய்வது சாத்தியமற்றது என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆளுநராக பதவி ஏற்ற பிறகு நிச்சயம் தமிழக அரசின் நிர்வாகத்தில் ரவின் தலையீடு இருக்கும் என்று அவரை பற்றி தெரிந்தவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக காவல்துறையின் செயல்பாடுகளில் அவர் நேரடியாக தலையிட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் ஒரு ஆளுநருக்கு என்று உள்ள அனைத்து அதிகாரங்களையும் ரவி நிச்சயம் பயன்படுத்துவார் என்கிறார்கள்.

இதனிடையே தமிழக ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியான மறு நிமிடமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்திற்க ரவியை வரவேற்பதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார். இதற்கு காரணம் ஆளுநர் நியமன விவகாரத்தில் மோதல் போக்கு கூடவே கூடாது என்று ஸ்டாலின் நினைப்பது தான் என்கிறார்கள். மேலும் மேற்கு வங்கம், கேரளா போல் தமிழகத்தில் ஆளுநர் – முதல்வர் மோதல் ஒரு போதும் வந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் ஆளுநர் மாற்றம் என்பது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கான பதிலடி என்பதை பட்டவர்த்தனமாக உணர்ந்துள்ள ஸ்டாலின் அதற்கு ஏற்பவே இனி அரசியல் ரீதியிலான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

click me!