தனி ஐடி டீம்..! பேஸ்புக் நேரலை.. பிடிஆர் தனி ஆவர்த்தனம்..! எச்சரிக்கும் திமுக பெருந்தலைகள்..!

By Selva KathirFirst Published Jun 22, 2021, 10:26 AM IST
Highlights

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக பிரஸ் மீட்டிற்கு அழைத்துவிட்டு பெண் பத்திரிகையாளருக்கு அறிவு இல்லையா? பெண்களுக்கு உரிமை இல்லையா? என டிராக்கை வேறு பக்கம் கொண்டு போன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

நிதி அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனை இப்படியே விட்டால் திமுகவின் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிவிடும் என்று அக்கட்சியின் பெருந்தலைகள் தகவல்களை மேலிடத்திற்கு பாஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக பிரஸ் மீட்டிற்கு அழைத்துவிட்டு பெண் பத்திரிகையாளருக்கு அறிவு இல்லையா? பெண்களுக்கு உரிமை இல்லையா? என டிராக்கை வேறு பக்கம் கொண்டு போன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் பெட்ரோல் விலையை எப்போது லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்பீர்கள் என்று செய்தியாளர் கேட்ட போது, காரணமே இல்லாமல் டென்சன் ஆனதுடன், குறைப்போம் என்று சொன்னோம் தோனி போட்டோமோ? என்று சீறியது திமுகவவின் இமேஜை டோட்டலாக டேமேஜ் ஆக்கியுள்ளது.

அத்தோடு செய்தியாளர் சந்திப்பிற்கு தனது பிரத்யேக ஐடி டீம் மூலமாக பிடிஆர் ஏற்பாடு செய்ததும் திமுக பெருந்தலைகளின் கண்களை உருத்த ஆரம்பித்துள்ளது. மேலும் பிடீஅர் செய்தியாளர்களை சந்தித்த போது அதனை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் அவரது பிரத்யேக ஐடி டீம் நேரலை செய்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்புடைய நிகழ்வுகள் மட்டுமே தற்போது அவரது சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்படுகிறது. மு.க.ஸ்டாலினின் வாரிசும் அடுத்த திமுக தலைவர் என்று கூறப்படுபவருமான உதயநிதியின் செயல்பாடுகள் கூட பேஸ்புக்கில் நேரலை செய்யப்படுவதில்லை.

ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் செய்தியாளர் சந்திப்பு முழு அளவில் நேரலை செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்று பிரத்யேகமாக தனி டீமை வைத்து ஏற்பாடுகளை பிடிஆர் கச்சிதமாக செய்து வைத்துள்ளதாக கூறுகிறார்கள். திமுகவின் ஐடி விங் செயலாளராக பிடிஆர் இருந்தாலும் கூட தனது செல்வாக்கை சமூக வலைதளங்களில் உயர்த்த அவர் துவக்கம் முதலே இந்த பாணியை பின்பற்றி வருகிறார். எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்த போதும் கூட பிடிஆரின் செய்தியாளர் சந்திப்புகளை அவரது டீம் நேரலை செய்து கொண்டு தான் இருந்தது.

ஆனால்  தற்போது நிதி அமைச்சரான பின்னர் அவரது செய்தியாளர் சந்திப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் செய்தியாளருடன் சண்டை பிடிப்பது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது பற்றி கேட்டால் வாக்குறுதி கொடுத்தோம் தேதி போட்டோமா என்று ஐதர் காலத்து டெக்னிக்குடன் செய்தியாளர்களிடம் பதில் கேள்வி கேட்பது என பிடிஆரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ட்விட்டரில் கூட பிடிஆரின் தேதி போட்டாங்களா ஒரு நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது.

அத்தோடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட சட்டப்பேரவை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த போது பிடிஆரின் எகத்தாளமான பேட்டியை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினார். இவை அனைத்தையும் ஒரு தொகுப்பாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  எப்போதும் அறிவாலயத்தில் இருக்கும் இரண்டு பெருந்தலைகள் அனுப்பி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் எப்போதும் ஸ்டாலினுடன் இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில அமைச்சரும் கூட பிடிஆரின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று போட்டுக் கொடுத்து வருவதாக சொல்கிறார்கள்.

மேலும் கட்சியின் தலைவராக  நீங்கள், அடுத்த தலைவராக உதயநிதி இருக்கும் நிலையில் தனியாக ஐடி டீம் வைத்து தன்னை அந்த அமைச்சர் புரமோட் செய்து கொள்வது எதற்கு என்றும் ஸ்டாலினிடம் பற்ற வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதுநாள் வரை அமைச்சராக வேண்டும் என்று அவர் ஐடி டீமை பயன்படுத்தியது ஓ.கே., அமைச்சரான பிறகும் கூட அவர் தன்னை புரமோட் செய்து கொள்கிறார் என்றால் கவனம் தேவை என்றும் ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் சிலர் கூறி வருவதாக சொல்கிறார்கள்.

click me!