மின்தடை ஏற்பட அணில் தான் காரணம்... அடடே விளக்கமளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!

Published : Jun 22, 2021, 10:22 AM IST
மின்தடை ஏற்பட அணில் தான் காரணம்... அடடே விளக்கமளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!

சுருக்கம்

மின் தடை ஏண் ஏற்படுகிறது என்பதற்கு வித்தியாசமான பதிலை அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  

மின் தடை ஏண் ஏற்படுகிறது என்பதற்கு வித்தியாசமான பதிலை அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. திமுக அரசு பதவியேற்று பத்து நாட்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைப்போம் என்று கூறினர். தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால், தற்போது தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்காததால் இந்தத் தடை ஏற்படுகிறது. அவர் தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அதிமுக அரசு சரியாகப் பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்று காரணம் கூறி, தவறான தகவலைத் தருகிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மின் தடைக்கு காரணம் அணில் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘’மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை’’ என விளக்கமளித்துள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!