
கடந்த 4 மாதங்களாக பிரிந்து இருந்த அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேருவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில், 4 அமைச்சர்கள் மட்டும் தலையிட்டுள்ளனர்.இதனால், அவர்கள் மட்டும் தான் அதிமுகவாக என முன்னாள அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து கரூரில், செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி, கொந்தளித்து பேசினார். அவர் பேசியதாவது:-
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது. இதற்காக தனி குழுவை அமைக்க இருக்கின்றனர். இந்த இணைப்புக்கான முக்கிய காரணம், ஆட்சியையும் சின்னத்தையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதே என கூறுகின்றனர்.
இன்று மாலை இரு அணியினரும் குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறியுள்ளனர். இதில், கலந்து கொள்ளும் 4 அமைச்சர்களுக்கு மட்டும்தான் கட்சி மீதும், ஆட்சி மீதும் அக்கறை இருக்கிறதா...?
ஆட்சியை தொடர்ந்து நடத்துவதற்கும், கட்சியின் சின்னத்தை மீண்டும் பெறுவது என்பதே முக்கியம் என கூறியுள்ளனர். ஆனால், இந்த அணியில் குறிப்பிட்ட 4 அமைச்சர்கள் தான் பேசுகிறார்கள்.
கட்சியின் பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில்தான் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக உள்ளார்.
இந்த அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை பற்றி, இதுவரை அதிமுக எம்எல்ஏக்கள் ஒருவரிடமும் கருத்து கேட்கவில்லை. பேச்சுவார்த்தை குழுவினரும் இதுபற்றி பேசவில்லை. எம்எல்ஏக்களின் மனநிலை என்ன அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அவர்களுக்கு அக்கறையே இல்லை.
ஆனால், பேச்சுவார்த்தையில் இவர்கள் எதை அறிவித்தாலும் அதிமுக எம்எல்ஏக்கள் அதற்கு கட்டுப்படுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் எதிர்த்து பேசப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.