
விவசாயிகள் நலன் காக்க நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை ஆட்டோக்கள் இயக்கப்படாது என்று சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.
விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க திமுக அழைப்புவிடுத்துள்ள முழு அடைப்பு போராட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன.
வணிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள், என அனைத்து தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளார்.இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரு நாள் ஆட்டோக்கள் இயக்கப்படா மாட்டாது என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.