திமுக ஆட்சிக்கு உலக தமிழர்களாக துணை நிற்போம்.. ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து.

Published : May 02, 2021, 08:40 PM IST
திமுக ஆட்சிக்கு உலக தமிழர்களாக துணை நிற்போம்.. ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து.

சுருக்கம்

மறைந்த தலைவர் மு.கருணாநிதி அவர்களின் வழியில் தமிழக மக்களின் உணர்வை புரிந்து தங்கள் தலைமையில் திமுக ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை உலக தமிழர்கள் மத்தியில் உள்ளது. தாங்களும், தங்களின் புதிய அமைச்சரவையும் தமிழக மக்களுக்கு அரணாக நிற்பீர்கள் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. 

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபத்தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக அரியணையேற உள்ள திமுக தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதன் விவரம்: 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் சுழல் உருவாகி உள்ளது, மரியாதைக்குரிய சகோதரர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக அறியணையேற உள்ள இத்தருணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பிலும், இலங்கை தமிழ் மக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மறைந்த தலைவர் மு.கருணாநிதி அவர்களின் வழியில் தமிழக மக்களின் உணர்வை புரிந்து தங்கள் தலைமையில் திமுக ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை உலக தமிழர்கள் மத்தியில் உள்ளது. தாங்களும், தங்களின் புதிய அமைச்சரவையும் தமிழக மக்களுக்கு அரணாக நிற்பீர்கள் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. 

வெற்றி வாகை சூடும் அதே நேரத்தில் உங்கள் நல்ல நோக்கங்கள் நிறைவேற உலக தமிழர்களாக நாங்கள் என்றும் துணை நிற்போம் என்பதை கூறிக்கொள்கிறேன். உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற, தங்கள் தலைமையில் தமிழகம் வெற்றிநடைபோட வாழ்த்துகிறேன்.
 
PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!