தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றுங்க ஸ்டாலின்... ரஜினி போட்ட ட்விட்டர் வாழ்த்து..!

Published : May 02, 2021, 08:24 PM ISTUpdated : May 02, 2021, 10:15 PM IST
தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றுங்க ஸ்டாலின்... ரஜினி போட்ட ட்விட்டர் வாழ்த்து..!

சுருக்கம்

அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.  

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளைக் கைபற்றும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைக் கைபற்றும். இந்தத் தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி  வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திமுக மட்டும் தனித்து 130  தொகுதிகளில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியின் உறுதியாகிவிட்ட நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பிரமுகர்கள் என பலரும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ட்விட்டரிலும் ரஜினி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “ நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து, வெற்றியடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு.க. ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று ட்விட்டரில் ரஜினி  தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?