மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த போதும் திமுக அமைச்சர்களின் ஊழல் தொடர்பான புகார்களை அடங்கிய கோப்புகளை அளித்ததாக கூறப்பட்டது.
undefined
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடு, ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அவரதுது அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.
செந்தில் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் சம்மந்தமான தொழில் செய்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். இவர் அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் கார்த்திகேயன் கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திமுக அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.