கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது மேற்கொண்ட போது, திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளின் காரை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை
தமிழகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீடு மற்றும் சென்னை,கோவை, உட்பட்ட 50 க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுவிலக்கு துறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்தன வண்ணம் இருந்த நிலையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அதிமுக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியினர் தமிழாக ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருந்தனர். தற்போது வருமானவரித்துறையினர் கரூர் மட்டுமல்லாது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
undefined
வருமான வரித்துறை கார் மீது தாக்குதல்
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்திலும் ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தா இன்ஃப்ரா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளின் வெளிய நின்ற கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
திமுக தொண்டர் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது இதனையடுத்து மயக்கம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்களின் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர்.
இதையும் படியுங்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடி ரெய்டு; அதிகாரிகளின் கார்களை சூறையாடிய தொண்டர்கள்