அவரை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்… அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!!

By Narendran S  |  First Published Aug 22, 2022, 7:45 PM IST

எதாவது பேச வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இப்படிப் பேசி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார். 


எதாவது பேச வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இப்படிப் பேசி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறார். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. ஊடகங்களைச் சந்தித்து எதாவது பேச வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசி வருகிறார். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்பதால் இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம். அண்ணாமலை சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் புரிந்து கொள்ளும் பக்குவம் அல்லது தெரிந்து கொள்ளும் முயற்சி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மீனா-திருமா காதல் கேள்வி.. அந்த மனசு எவ்வளவு பாடுபட்டு இருக்கும்.. கழுவி ஊற்றிய கார்டூனிஸ்ட் பாலா

Tap to resize

Latest Videos

இந்த இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். தமிழக மின்சார வாரியத்தில் இருந்து ஏற்கனவே மத்திய அரசுக்கு ரூ.70 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று, மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும். செலுத்திய தொகை சரிபார்க்கும் வசதியை போர்டலில் ஏற்படுத்த வலியுறுத்த உள்ளோம். 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவையில் இருந்த நிலையில், மத்திய அரசு தடை போடுகிறது.

இதையும் படிங்க: தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்கும் பல நிலுவைத் தொகைகளை உரிய நேரத்தில் தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகத் தான் பார்க்க முடிகிறது. மின்சார சட்டத்திருத்த மசோதாவை அனைவருமே எதிர்க்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட எதிர்ப்புகள் உள்ளன. மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!