தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

By Raghupati R  |  First Published Aug 22, 2022, 7:09 PM IST

முதல்வர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதியில் செயல்பாட்டுக்கு வரும் நலத்திட்டங்களை நேரில் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளார். 

அதன்படி முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து 23ம் தேதி விமானம் மூலம் கோவை சென்று, அன்று இரவு கோவையில் தங்குகிறார். பின்னர் 24ம் தேதி கோவையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் ஈரோடு மாவட்டம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதை தொடர்ந்து 25ம் தேதி திருப்பூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறு, குறு தொழில் நிறுவன அதிபர்கள் பங்கேற்கும், ‘தொழிலுக்கு தோள் கொடுப்போம்’ என்ற மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்! தீவிரவாதி கைது.. யார் அந்த தலைவர் ?

26ம் தேதி ஈரோடு மாவட்டம் செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளில், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கோவைக்கு வரும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

மேலும் கோவையில் முதல்வர் செல்லக்கூடிய வழிகள் எங்கும் திரளான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் உள்ள திமுகவினர் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதே நாளில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு வருகை தர உள்ளார் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா நாளை மறுநாள் 24-ம் தேதி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

அதிமுகவில் வெடித்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் என பல்வேறு பிரச்சனைக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி கோவை வருவதும், அதே நாளில் முதல்வர் ஸ்டாலின் வருவதும் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இருவரும் வருவதால், கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவருக்கும் அந்தந்த கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்க தயாராகி வருவதால் கோவை முழுவதும் தொண்டர்கள் சுறுசுறுப்பாக இருக்கின்றனர் என்றே கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு..இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி - விஷயம் தெரிந்த மாமனார் செய்த சம்பவம் !

click me!