மீண்டும் பாஜகவில் இணைந்தார் அர்ஜுன மூர்த்தி… இதுதான் காரணமாம்!!

Published : Aug 22, 2022, 05:28 PM IST
மீண்டும் பாஜகவில் இணைந்தார் அர்ஜுன மூர்த்தி… இதுதான் காரணமாம்!!

சுருக்கம்

ரஜினியின் ஆரம்பிக்க உள்ள கட்சியில் இணைந்துக்கொள்ள பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.     

ரஜினியின் ஆரம்பிக்க உள்ள கட்சியில் இணைந்துக்கொள்ள பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து அதற்கு பல நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து அர்ஜுன மூர்த்தி பாஜகவில் அறிவு சார் பிரிவு மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி ரஜினி தொடங்க இருந்த கட்சியில் இணைந்தார்.

இதையும் படிங்க: இலவசங்கள் தரும் கட்சியோடு பாஜக கூட்டணி இல்லையா..? அண்ணாமலையின் அதிரடி பதில்

ஆனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், இன்று மீண்டும் அவர், பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக சிறப்பான அந்தஸ்தை பெற உழைப்பேன். பதவி, அந்தஸ்துக்காக பாஜகவில் சேரவில்லை. ஆன்மீக அரசியல் தொடர்பான ரஜினியுடன், ஒருமித்த அரசியல் கருத்து இருந்ததால் நான் இணைந்திருந்தேன். இப்போது ரஜினியின் ஆசிர்வாதத்துடன்தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன்.

இதையும் படிங்க: புழலுக்கு எடப்பாடியும், புனித ஜார்ஜ் கோட்டையில் OPSம் செல்லும் காலம் வரும்! மாஸ் காட்டும் மருது அழகுராஜ்.!

விவேகம், வீரியமிக்கராக அண்ணாமலை இருக்கிறார். ரஜினியிடம் தெளிவான சிந்தனை, தொலைநோக்குப் பார்வை இருந்தது. ரஜினி ஒரு கருத்தை கூற நினைத்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுவார். ரஜினி உட்பட அனைத்து இந்திய குடிமகனுக்கும் அரசியல் என்பது அடிப்படை உரிமை. அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். தொலைநோக்கு பார்வை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு