அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை பாஜக தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஆனால் சில கோயில்களில் ஆகமங்கள் இருக்கிறது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
வசூல் வேட்டை நடத்தும் திமுக
பாஜகவின் அறிவு சார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன் மூர்த்தி, நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கியபோது அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தனது உடல் நிலை பாதிப்பு காரணமாக தன்னுடைய அரசியல் களம் இறங்குவதை ரஜினி கைவிட்ட நிலையில் அர்ஜுன மூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தனது கட்சியை கலைத்து விட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை மீண்டும் பாஜகவில் அர்ஜூன் மூர்த்தி இணைத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அர்ஜூன் மூர்த்தி தொழில் நுட்ப தெரிந்த மனிதர்., சூப்பர் ஸ்டார் உடன் அரசியல் பயணம் சென்று மீண்டும் வந்துள்ளார்., பாஜக சித்தாதம் ஏற்று யார் ஏற்று வருகிறாரோ அவர்களை பாஜகவில் இணைத்து கொள்ளவோம் என கூறினார். மின் கட்டண உயர்வு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மின் கட்டண உயர்வுக்காக மக்கள் கருத்தை கேட்க முயற்சிப்பது நாடகம். மின் கட்டண விலையை குறைப்பதாக கூறி பெரிய தொழில் நிறுவனங்களுடன் மின்சாரத் துறை அமைச்சர் சார்பில் பேரம் பேசி வருகின்றனர். மக்கள் கருத்து கேட்பு என்ற கபட நாடகத்தை நிறுத்த வேண்டும். வசூல் வேட்டை நடத்ததான் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதாக கூறினார்.
வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி...! நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏன்..? ராமதாஸ் ஆவேசம்
இலவசம் தரும் கட்சியோடு கூட்டணியா..?
ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய ஆதரவாக இருப்போம். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தொடர்ந்து கருத்து கேட்டு கொண்டே இருந்தால் அடுத்து தற்கொலை மூலம் சிந்தப்படும் ரத்தத்திற்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் , முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என கூறினார். இலவசங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பதுதான் தவறு. குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறு அல்ல. Public goods எனும் சுகாதாரம் , கல்வி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் , இது மக்களின் அடிப்படை உரிமை. வீடு , எரிவாயு , குடிநீர் , வங்கி கணக்கு இவற்றை இலவசம் என்ற பெயரில் குறிப்பிடாமல் மத்திய அரசு வழங்குகிறது. இதை இலவசமாக கருதாமல் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக பாஜக கருதுகிறது. ராஜஸ்தானில் தேர்தல் வருவதால் காங்கிரஸ் அரசு செல்போன் , டேட்டா இலவசம் என்று கூறியுள்ளது. தேர்தல் அறிக்கையில் இலவசம் எனும் பெயரில் பொருளாதார திட்டமிடல் இன்றி திமுக பலவற்றை அறிவித்து ஆட்சிக்கு வந்தது. விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் பாஜகவின் இலக்கு என கூறினார். பாஜகவின் தலைவர்கள் இலவசம் தொடர்பாக அதிகாரபூர்வ கருத்தை கூறவில்லை , இலவசங்கள் தரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோமா என்பது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர்கள்தான் கூற வேண்டும். மாநில தலைவராக நான் கருத்து கூற முடியாது என தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை..! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட புதுவை முதலமைச்சர்
கம்பீரமாக பேட்டி- பிரதமரிடம் கெஞ்சல்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை பாஜக தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஆனால் சில கோயில்களில் ஆகமங்கள் இருக்கிறது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம். ஆகமங்கள் சாதி ரீதியாக பாகுபாடு பார்க்கவில்லை. சில கோயில்களில் பெண்கள் தான் அர்ச்சிக்கின்றனர்.திமுகவின் 506 தேர்தல் வாக்குறுதியில் பாதிக்கு மேல் தேவையில்லாத இலவசங்கள். திமுக அரசின் ஆட்சிக் காலத்தில் 20 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. 2026 தேர்தல் அறிக்கையில் வீட்டிலேயே இருங்கள் 10 ஆயிரம் தந்து விடுகிறேன் என்று திமுக கூறினால் அது தவறு , கிரிமினல் குற்றம். அதன் பெயர்தான் இலவசம். போதுமான நிதி இல்லாதபோது அவசியமற்ற இலவசங்கள் அறிவிப்பது தவறு. தமிழ்நாட்டில் பத்திரிகைக்கு கம்பீரமாக பேட்டி தந்துவிட்டு , டெல்லியில் அறைக்குள் சென்று பிரதமரிடம் மாநில அரசிடம் பணம் இல்லை காப்பாற்றுங்கள் என்று கூறுவது எப்படி சரியாகும் என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
எல்லாத்துக்கும் காரணம் இபிஎஸ் தான்..! கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்...? புகார் மனுவால் பரபரப்பு