புழலுக்கு எடப்பாடியும், புனித ஜார்ஜ் கோட்டையில் OPSம் செல்லும் காலம் வரும்! மாஸ் காட்டும் மருது அழகுராஜ்.!

By vinoth kumarFirst Published Aug 22, 2022, 3:13 PM IST
Highlights

உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப்பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். இடி அமீன் எடப்பாடி பழனிசாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கி விட்டனர்.

புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் வரும் என மருது அழகுராஜ் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் அதை விமர்சித்ததன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையும் படிங்க;- ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி

தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர். இபிஎஸ் தரப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைவில் சிறைக்கு செல்வார் என கூறி வருகிறார். சமீபத்தில் மருது அழகுராஜ் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கும் ஆஜராகி பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப்பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். இடி அமீன் எடப்பாடி பழனிசாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்

மேலும் புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் அவர்களும் செல்லும் காலம் உருவாகும். ஜெயலலிதா கனவை நனவாக்குவோம் என ஒற்றுமையை வலியுறுத்தும் ஓபிஎஸ் பக்கம் நிர்வாகிகள் அணிவகுக்க தொடங்கிவிட்டனர் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

click me!