ஆளை பார்த்தே சாதியை கண்டுபிடிப்பேன்.. விசாரணைக்கு அழைத்த கல்லூரி நிர்வாகம்.. லீவு போட்டு எஸ்கேப் ஆன பேராசிரியை

Published : Aug 22, 2022, 02:30 PM ISTUpdated : Aug 22, 2022, 02:39 PM IST
ஆளை பார்த்தே சாதியை கண்டுபிடிப்பேன்.. விசாரணைக்கு அழைத்த கல்லூரி நிர்வாகம்.. லீவு போட்டு எஸ்கேப் ஆன பேராசிரியை

சுருக்கம்

ஆளை பார்த்தே  சாதியை கண்டுபிடிப்பேன் என கல்லூரி பேராசிரியை பேசிய விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் குழு அமைத்துள்ளது. ஆனால் ஆசிரியை இன்று விடுப்பில் சென்றுள்ளார், 

ஆளை பார்த்தே  சாதியை கண்டுபிடிப்பேன் என கல்லூரி பேராசிரியை பேசிய விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் குழு அமைத்துள்ளது. ஆனால் ஆசிரியை அதில் இருந்து தப்பிக்க இன்று விடுப்பில் சென்றுள்ளார், இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.  

சாதியற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது, தங்களிடம் படிக்கும் மாணவர்களை சாதி மதம பாகுபாடற்ற சமூதாயமாக வளர்க்க வேண்டிய கடமை பொறுப்பு ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கு உள்ளது. ஆனால் இங்கு ஒரு கல்லூரி பேராசிரியை ஒருவர் மாணவர்கள் மத்தியில்  சாதி பாகுபாடை விதைக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்:  பிரதமரை சந்தித்த போது இதை தான் அன்பளிப்பாக கொடுத்தேன்.. முதலமைச்சர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

முழுவிவரம் பின்வருமாறு:- சென்னையில் மிகப் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று பச்சையப்பன் கல்லூரி, அதில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அனுராதா, கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்களுக்கு  எதிரான மனநிலையில் செயல்பட்டு வந்துள்ளார். அவர் மாணவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் ஆடியோ அதை உறுதி செய்வதாக உள்ளது. அந்த உரையாடலில்  ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்றாலே பிரச்சனை தான், அவர்கள்மட்டும்தான் நமக்கெல்லாம் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை..! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட புதுவை முதலமைச்சர்

மேலும் சில மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் சாதியை அவர் விசாரிக்கிறார், சில மாணவர்களின் பெயரை சொல்லி அவன் எஸ்சி மாணவனா?  நீ என்ன சாதி,  ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்தாலே அவன் என்ன சாதி என்று கண்டுபிடித்து விடுவேன் என்றும் அவர் அதில் பேசியுள்ளார். இந்நிலையில் அந்த ஆசிரியைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த பேராசிரியை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பேராசிரியை எழுத்துபூர்வமான விசாரணைக்கு மட்டுமே ஏற்றுக் கொள்வேன், வாய்மொழி விசாரணைக்கு ஆஜராக  முடியாது என கூறியதாகவும் தெரிகிறது. கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இன்று கூனியுள்ளது, ஆனால் இதுவரை எழுத்துப்பூர்வமாக அந்த பேராசிரியைக்கு கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை, இது குறித்து தெரிவித்துள்ளார் கல்லூரியின் முதல்வர் எழுத்துப்பூர்வமாக கடிதம் தயாராக உள்ளது, விரைவில் அனுராதாவுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். குறிப்பிட்ட பேராசிரியருக்கு எதிராக பேராசிரியர் ஒருவர் மட்டுமே புகார் பிடித்திருப்பதாகவும், ஆசிரியைக்கு எதிராக மாணவர்களோ அல்லது அமைப்புகளோ எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் விசாரணைக்கு பேராசிரியர் ஆஜராக வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்று  மாலை 5 மணி வரை அவருக்காக கமிட்டி காத்திருக்கும் என்றும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மாறாக ஆசிரியை இன்று விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார், எனவே அவர் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று கூறப்படுகிறது,  அவர் ஒருவேளை விசாரணைக்கு ஆஜராக விட்டால்  அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கல்லூரி முதல்வர் தெளிவாக கூற மறுத்துள்ளார். ஆனால் அவரிடம் விசாரணை நடத்த குழு கல்லூரியில் கூடியிருக்கிறது, ஆசிரியை விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதால், கல்லூரிக்கே வராத அவர் விசாரணைக்கு மட்டும் எப்படி ஆஜராவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!