முதலில் நலதிட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கங்க... மோடிக்கு பாடம் எடுத்த கனி மொழி.

By Ezhilarasan BabuFirst Published Aug 22, 2022, 1:44 PM IST
Highlights

சமூக நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு அதிக வித்தியாசம் இருக்கிறது, அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

சமூக நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு அதிக வித்தியாசம் இருக்கிறது, அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். வாக்குக்காக இலவசங்கள் கொடுக்கக்கூடாது, அது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடும் என தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் கனிமொழி இவ்வாறு கூறியுள்ளார். 

முழு விவரம் பின்வருமாறு:- சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் மாணவர் யூனியன் துவக்க விழா நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்போது அவர்  மேடையில் பேசுகையில், கல்லூரிக் காலத்தில்தான் மாணவர்கள் பல்வேறு விதமான மனிதர்களை சந்திக்க முடியும், 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த மசோதா ஏன் இதுவரை சட்டமாக்க படவில்லை என்பது கேள்விக்குறி.

இதையும் படியுங்கள்: பெண் அமைச்சர்களுக்கு திமுகவில் கொஞ்சம் கூட மரியாதை இல்லை.. திராவிட மாடலில் வெடி வைத்த கீதா ஜீவன்..

மாணவர்களுக்கு தலைமை பெறுப்புக்களில் வரும் மாணவிகள் எடுக்கிற முடிவு தைரியமானதாக இருக்க வேண்டும், கல்லூரி காலம் தான் மாணவர்களுக்கு மன வலிமையை ஏற்படுத்தும், ஒவ்வொரு முறையும் நாம் கீழே விழும்போதும் வலுவுடன் மேலே எழ வேண்டும், அதிகம் நண்பர்களை கொடுப்பது கல்லூரிதான், கல்லூரியில் மாணவ பிரதிநிதிகளாக பணியாற்றுபவர்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும், நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்திலும் அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், அதிகம் அரசியல் பேசுங்கள் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

இதையும் படியுங்கள்:  இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பாஜக அரசின் கீழ் எத்தனை நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு விவசாயிகள் அச்சட்டத்தை திரும்பப் பெற வைத்தனர், அதற்காக அவர்கள் அத்தனை நாட்கள் போராட வேண்டியிருந்தது, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அரசாக இது இல்லை, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும், அதைக் கூட காது கொடுத்து கேட்கவில்லை என்றால், எந்தவித ஜனநாயகமும் இருக்க முடியாது என்றார், அப்போது இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர்கள் பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

நலத் திட்டங்களுக்கும் இலவசத் திட்டங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது அதை உணர்ந்து கொள்ள வேண்டும், அடித்தட்டு மக்கள் முன்னேறுவதற்காக கொடுக்கப்படுவது இலவசங்கள் அல்ல, அரசு என்பது மக்களுக்கு தானே ஒழிய கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல அதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும், அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய விஷயங்களை அரசு கொடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மக்களுக்கு இளவச அரிசி,  கல்வியை இலவசமாக கொடுப்பதன் மூலம் அடித்தட்டு மக்கள் முன்னேற முடியும். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!