விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் திருமணத்தைப் பற்றி கேள்வி எழுப்பியது அநாகரிகமானது என்றும், அதை அவர் கடந்து செல்ல முயற்சித்த போதும் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி நெறியாளர் மீண்டும் மீண்டும் அவரிடம் சுற்றி சுற்றி அதைப்பற்றியே கேட்டுக் கொண்டிருந்ததும், ஊடாக நடிகை மீனாவுடன் அவரை சம்பந்தப்படுத்தி கேள்வி எழுப்பியதும் கண்டிக்கத்தக்கது என்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் திருமணத்தைப் பற்றி கேள்வி எழுப்பியது அநாகரிகமானது என்றும், அதை அவர் கடந்து செல்ல முயற்சித்த போதும் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி நெறியாளர் மீண்டும் மீண்டும் அவரிடம் சுற்றி சுற்றி அதைப்பற்றியே கேட்டுக் கொண்டிருந்ததும், ஊடாக நடிகை மீனாவுடன் அவரை சம்பந்தப்படுத்தி கேள்வி எழுப்பியதும் கண்டிக்கத்தக்கது என்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனிடம் நீங்கள் மீனாவை காதலிக்கிறீர்களாமே என தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் பாலா இவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பிரபல தனியார் தொலைக்காட்சி நெறியாளர் முக்தார் அகமது திருமாவளவனிடம் நேர்காணல் நடத்தினார். அதில் அவர் எழுப்பிய சில கேள்விகள் சர்ச்சையாக மாறியுள்ளது. நீங்கள் நடிகை மீனாவை காதலித்தீர்களா என அவர் எழுப்பிய கேள்வி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதேபோல் ஏன் திருமணம் என்ற விவகாரத்தில் மிகவும் சுய நலமாக இருக்கிறீர்கள், கடைசி நேரத்தில் உங்களுக்கு உதவிக்காக நீங்கள் ஏன் ஒரு பெண்ணை வைத்துக் கொள்ளக்கூடாது என அவர் கேள்வி எழுப்பியது திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள்: மீண்டும் பாஜகவில் இணைந்தார் அர்ஜுன மூர்த்தி… இதுதான் காரணமாம்!!
ஆனால் அதற்கு அவர் காலம் சூழல் எப்படி அமைகிறது என்று பார்க்கலாம் எனக் கூறி கடந்து சென்றுவிட்டார், ஆனால் முக்தார் அகமதுவின் இந்த இரு கேள்விகளையும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சித் தலைவரிடன் ஊடக சுதந்திரம் என்ற பெயரில் இப்படித்தான் அத்தி மீது கேள்வி எழுப்புவதா? அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி கேள்விக்குட்படுத்த முடியும் என்றும் போலர் ஆவேசமடைந்த வருகின்றனர். இது குறித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் முக்தார் நடத்திய நேர்காணலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது பின்வருமாறு:- ரொம்ப அசிங்கமா இருக்கிறது முக்தார், திருமாவளவன் அவர்களிடம் கேள்வி கேட்பதற்கும், உரையாடுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் தவிர்த்து அவரது திருமணம் குறித்து கேட்டதே மிகவும் அபத்தமானது, போகிற போக்கில் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டியதுதான், ஆனால் உங்களின் கேள்விக்கு அவர் நாகரீகம் கருதி பதில் சொல்லி கடந்து போகிறார், ஆனால் நீங்கள் அவரை விடாமல் மீண்டும் மீண்டும் செக்குமாடு மாதிரி அங்கேயே சுற்றி வருகிறீர்கள், அது மட்டுமின்றி இதில் சம்பந்தமே இல்லாத ஒரு நடிகையை குறித்து ஒரு கிசுகிசுவான கேள்வியை வைக்கிறீர்கள். பின்னர் அதையும் வெட்டி தலைப்பாக வைக்கிறீர்கள்.
உங்கள் அழுகிப்போன தக்காளியை விற்க முயற்சிக்கிறீர்கள். ஒரு நடிகை என்றால் அவரை பொதுவெளியில் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் கேட்கலாமா? கணவனை இழந்து குழந்தையுடன் தனிமையில் இருக்கும் அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும், அந்த இடத்தில் நம் வீட்டுப் பெண்களை வைத்துப் பாருங்கள், அப்படி பார்த்திருந்தால் இந்த கேள்வி கேட்க வேண்டிய எண்ணம் வருமா? அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றிக்கூட ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வருகிறது, அவர்களிடத்தில் இதுபோல கேள்வியைக் கேட்க முடியுமா என கடுமையாக விமர்சித்துள்ளார்.