டீடெய்லா சொல்லியாச்சு... போய் வேலையை பாருங்கள்... அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி அட்வைஸ்..!

By Thiraviaraj RMFirst Published Oct 21, 2021, 5:05 PM IST
Highlights

 தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள். 

தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு திரு. அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOனால் 30/3/2012 அன்று LANCO நிறுவனத்திற்கு Original proposal வழங்கி, பின்னர் 27/12/2014 அன்று LoA (Letter of Award) வழங்கப்பட்டது. 

கிட்டத்தட்ட ரூ. 1700 கோடி செலவாகி, குறைந்த பணிகளே முடிந்த நிலையில், LANCO நிறுவனம் insolvency ஆகிறது. As is where is என்ற அடிப்படையில், எடப்பாடி அரசு 2/3/2019 அன்று BGR நிறுவனத்திற்கு, நின்ற பணிகளை துவங்கிட LoA வழங்கி, 1/3/2021 அன்று CTE (Content to Establish) கொடுக்கிறது. பேரம் படியாததால் ஏப்ரல் 2021ல், அந்த ஒப்பந்தத்தை முடித்து கொள்கிறது. BGR நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது. 

இது புது ஒப்பந்தமில்லை. பாஜகவும் அதிமுகவும் கூட்டணியாய் இருந்த போதே நிகழ்ந்த ஒப்பந்தம். ஒப்பந்த தொகையும் எடப்பாடி அரசு நிர்ணயம் செய்ததே. முழுக்க அதிமுக ஆட்சியில் நடந்த நிகழ்வுகள். தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி, மின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, பணி ஆரம்பிக்கப்பட்ட பின், மேலும் காலம் தாழ்த்தாமல் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!