முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட புதிய மனு.. அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By vinoth kumar  |  First Published Feb 20, 2024, 3:00 PM IST

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் தேதி அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் தேதி அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16ம் தேதி முடிவடைந்தது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜியின் தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: 6 பெட்டிகள்.. வைரம் முதல் தங்கம் வரை .. தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் நகைகள்.. நீதிமன்றம் அதிரடி!

அதில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர்; பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அல்லிக்கு இன்று விடுமுறை என்பதால் சென்னை மூன்றாவது கூடுதல் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன் மூலம் 22வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

click me!