செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்

By Velmurugan s  |  First Published Feb 4, 2023, 1:38 PM IST

செந்தில் பாலாஜி எனக்கு மற்றொரு மகன் போல. அவர் தேர்தல் களத்திற்கு வந்துவிட்டார் இனி எனக்கு வெற்றி உறுதி என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தற்போது எதிரணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

ஒருவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் 40 ஆயிரம் பொய்யான வாக்காளர்கள் உள்ளதாக கூறுகின்றார். மற்றொருவர் 50 ஆயிரம் பொய்யான வாக்காளர்கள் இருப்பதாக கூறுகின்றார். எனவே எதிர்க்கட்சியினர் பொய்யான தகவல்களை கூறி மடை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை வழியில் மகன் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஈரோடு தொகுதியில் மகன் வழியில் நான் செல்கின்றேன். அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் களத்திற்கு வந்துவிட்டாலே வெற்றி உறுதி என்று எனக்கு தெரியும். அவர் எனக்கு இன்னொரு மகன் போன்றவர். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல ஆதரவை தருகின்றனர்.

பெற்றோரை கொன்றுவிடுவதாக கூறி 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை; சென்னையில் பயங்கரம்

முதல்வர், அமைச்சர்களிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தொகுதி மக்களுக்கு நல்லது செய்வேன். எப்போது ஈரோடு தொகுதி மக்கள் முகங்களில் சிரிப்பை பார்க்கின்றேனோ அப்போது தான் எனது மகன் நினைத்ததை நான் செய்து முடித்துள்ளேன் என்று அர்த்தம். மகன் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், மக்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவு அதனை மறக்கச் செய்கிறது என்றார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலில் மாற்றம் வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை

click me!