கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு ஜெர்க் கொடுத்த செந்தில்பாலாஜி..? ஆடிப்போன எஸ்.பி.வேலுமணி... அதிரும் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2021, 11:33 AM IST
Highlights

கோவை மாவட்டத்தில் திமுக செல்வாக்கை உருவாக்கவேண்டிய கட்டத்தில் செந்தில் பாலாஜியும், அங்கு ஏற்கெனவே இருக்கும் செல்வாக்கை நிலைநிறுத்த அதிமுகவின் எஸ்.பி.வேலுமணியும் செய்யும் அரசியல் பரபரக்கத் தொடங்கி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் கட்சியை வளர்த்தெடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது திமுக. அதன் பிறகு பல முறை கோவைக்கு வந்துவிட்ட செந்தில் பாலாஜிக்கு முதல் சவாலாக இருப்பது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். அதில் பெரும் வெற்றியைப் பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவை மாவட்டத்தில் திமுக செல்வாக்கை உருவாக்கவேண்டிய கட்டத்தில் செந்தில் பாலாஜியும், அங்கு ஏற்கெனவே இருக்கும் செல்வாக்கை நிலைநிறுத்த அதிமுகவின் எஸ்.பி.வேலுமணியும் செய்யும் அரசியல் பரபரக்கத் தொடங்கி இருக்கிறது.

`கோவை மக்கள் சபை’ என்ற பெயரில், ஆங்காங்கே மக்களிடம் மனுக்கள் வாங்கத் தொடங்கிவிட்டார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

செந்தில் பாலாஜி வருகையால் அதிமுக உச்சகட்ட அலர்ட்டில் இருக்கிறது. சிறிய வாய்ப்புகூட கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சமீபத்தில் செந்தில் பாலாஜியும், எஸ்.பி.வேலுமணியும் ஒரே விமானத்தில் பயணித்து இருக்கின்றனர். வேலுமணி உடனடியாகத் தனது ஆதரவாளர்களுக்கு போன் போட்டு ஏராமானோரை வர வைத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வைத்து அதகளப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக கோவைக்கு போய் வந்தார். முதல்வரை வரவேற்க ஒரு ஓட்டுச்சாவடிக்கு 40 பேர் வீதம், 2,500 ஓட்டுச்சாவடிக்கு ஒரு லட்சம் பேரை திரட்ட வேண்டும் என ஆளுங்கட்சியினர் திட்டம் போட்டு இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வராததால், ஆளுங்கட்சியின் கோவை பொறுப்பாளர்கள் 'அப்செட்' ஆகி விட்டார்கள்.  இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னால், சில நிர்வாகிகளை களையெடுக்கப்படலாம் என பேசிக் கொள்கிறார்கள். அதே நேரம் கோவையில் தி.மு.க., வேரூன்ற கூடாது என்று அ.தி.மு.க., தரப்பும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். 

​இந்நிலையில், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி பீளமேடு பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கட்சி பணிகளை விரைந்து உடனுக்குடன் முடிக்கவும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கோவையிலேயே திமுக அமைச்சர் குடியேறிவிட்டாராம். இதனை கேள்விப்பட்ட எஸ்.பி.வேலுமணி ஆடிப்போய் கிடக்கிறாராம். 

click me!