மின் கட்டணம் உயர்கிறது? வதந்தியா? உண்மையா? செந்தில் பாலாஜி விளக்கம்!!

By Narendran SFirst Published May 16, 2022, 3:58 PM IST
Highlights

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த செய்தி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அந்த செய்தி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து மிந்தேவையும் அதிகரித்துள்ளது. இதனிடையே மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இல்லை என்று நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்கி மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டது. இதை அடுத்து தேவைக்கு அதிகமாக மின் உறப்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்தப் பிரச்சினையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பேசி தீர்வு காணப்படும். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற செய்தி பரவி வருகிறது. யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு எந்த பதிலும் கூற முடியாது. அந்த தகவல் உண்மையில்லை என்று தெரிவித்தார். முன்னதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் முதல் போக சாகுபடிக்கு ஆழியார் மின் உற்பத்தி நிலையம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையிலிருந்து வெளியே வந்த தண்ணீரை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். 152 நாட்களுக்கு 1,205 மில்லியன் கனஅடி அளவிற்கு திறந்து விடும் தண்ணீர் மூலம் ஆழியார் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 6400 ஏக்கர் நன்செய் நிலங்கள் பயன் பெறுகிறது. இந்த நிலையில் ஆளியார் அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் மனு அளித்தனர். 

click me!