தமிழணங்கு ஒவியத்தில் வட மொழி எழுத்து..புத்தியை காட்டிடீங்களே .. அண்ணாமலையை வச்சி செய்யும் தங்கம் தென்னரசு

By Thanalakshmi VFirst Published May 16, 2022, 3:46 PM IST
Highlights

தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன்   ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடிக் கொடுத்துள்ளார்.
 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அடுத்தடுத்து தமிழணங்கு ஓவியத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் திமுக - பாஜகவினர் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 

தமிழகத்தை சேர்ந்த மத போதகர் தேவசகாயத்திற்கு ரோம் நகரில் புனிதர் பட்டர் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழா வாடிகனிலுள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்றது.இந்நிலையில் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் அங்கு இருக்கும் கன்னியாஸ்திரிகள் தமிழ்த் தாய் வாழ்த்தை பாடினர். இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு ஐடி அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

இது தொடர்பான காணொளியை ”இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ட்விட்டர் பதிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார் .மேலும் அதனுடன் ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் ! https://t.co/4nAVp6m7Cb pic.twitter.com/eu9g1WTVgI

— M.K.Stalin (@mkstalin)

அந்தப் படத்துடன், ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே..’ என்று தமிழின் பெருமையை போற்றும் வகையில் வரிகளை குறிப்பிட்டுருந்தார். ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு தமிழ்த்தாய் ஓவியத்தை பாஜகவினர் சர்ச்சையாக்கினர். கறுப்பு நிறத்திலும் தலைவிரி கோலமாகவும் இருக்கும் படத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன் வைத்தனர். 

இந்நிலையில் முதலமைச்சர் சர்ச்சைக்குள்ளான அந்த ஒவியத்தை பகிர்ந்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் குறிப்பிட்ட அதே வரிகளை எழுதி ஒரு தமிழ்த் தாய் ஓவியத்தைப் பகிர்ந்தார். இதனையடுத்து எது உண்மையான தமிழணங்கு ஓவியம் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்டுள்ளது. 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் pic.twitter.com/blg72my7yX

— K.Annamalai (@annamalai_k)

இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தமிழ்தாய் ஓவியத்தை பதிவிட்டு, அவருக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடிக்கொடுத்தார்.

தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். pic.twitter.com/XjtVP1nGKq

— Thangam Thenarasu (@TThenarasu)

இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,”தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன்   ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் என்று பதிவிட்டுள்ளார்.

click me!