கமல்ஹாசன் சொன்னதை நான் வரவேற்கிறேன்... சீமான் அதிரடி!!

By Narendran SFirst Published May 16, 2022, 3:09 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியை தலை இல்லாத முன்டமாக பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியை தலை இல்லாத முன்டமாக பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 16 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண விழாவில் புலவர் கலியபெருமாளை சந்தித்தபோது அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எனக்கு வழங்கினார். தன் வாழ்நாள் அனுபவத்தை சுருக்கி எழுதிய அப்புத்தகத்தில் மக்களை அணி திரட்டி அரசியல் படுத்தாமல் புரட்சியை முன்னெடுக்க முடியாது என்ற கடைசி 2 வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. பின்னலாடை துறை மட்டுமில்லாமல்  ஒவ்வொரு துறையாக பார்த்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு விலை வாசி தொடர்ந்து உயர்ந்து வந்தால் கூடிய விரைவில் இலங்கை நிலை இந்தியாவிற்கும் ஏற்படும்.

தமிழகத்தில் சிற்றூர்களை தவிர்த்து 80 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அரசின் சொத்து வரி உயர்வால் இரட்டிப்பாக வாடகை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அரசுக்கு வரி பெருக்கு உள்ளது ஆனால் மக்களுக்கு வருமான பெருக்கு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வரும் அண்ணன் எடப்பாடியாரும் பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இந்து ஈழம் அமைப்போம்‌ என்ற  அண்ணாமலையின் கருத்திற்கு செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?

இதுவரை முகாம்களில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்காதது ஏன்? அண்ணாமலை பேச வேண்டும் என்பதற்காக எதுவும் பேசி கொண்டு இருக்கக் கூடாது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வலுவான தலைமை இல்லாத காரணத்தால் தலை இல்லாத முன்டமாக பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் கொள்கையில் ஒன்றான 5 வருட ஆட்சியில் 1 தலைவருக்கு 1 பதவி தான் என்ற நிலைப்பாட்டை வரவேற்கிறேன். எம்மொழியும் கற்கலாம் ஆனால் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கமல்ஹாசன் கருத்தை நான் வரவேற்கிறேன் என்று தெரிவித்தார். 

click me!