அணி, அணியாக அறிவாலயம் நோக்கி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்… சென்னையைக் கலக்கப் போகும் தொண்டர்கள் !!

Published : Dec 13, 2018, 10:17 PM IST
அணி, அணியாக அறிவாலயம் நோக்கி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்… சென்னையைக் கலக்கப் போகும் தொண்டர்கள் !!

சுருக்கம்

நாளை திமுகவில் சங்கமம் ஆவதற்காக கரூரில் இருந்து நூற்றுகணக்கான வாகனங்களில்  செந்தில் பாலாஜியின்  ஆதரவாளர்கள் சென்னை நோக்கி அணி, அணியாக புறப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் அமமுகவின் முக்கிய பிரமுகருமாக இருந்த செந்தில் பாலாஜி நாளை சென்னை அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்  இணைய உள்ளார். இதற்கான விழா நாளை நடைபெறவுள்ளது.

முதலில் செந்தில் பாலாஜி திமுகவில் இன்று இணைவதாக இருந்தது. இணைப்புக்குப் பின் ஒரு நாள் ஆயிரக்கணக்கானோரை திரட்டி கரூரில விழா எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியும், அவருக்கு நெருக்கமான சிலரும் மட்டும் இணைவதாக பேசப்பட்டது.

ஆனால் ஒரு பெருங்கூட்டமாக வந்து இணைந்தால் தான் கெத்து என்பதால் ஆட்களைத் திரட்ட செந்தில் பாலாஜி ஒரு நாள் டைம் கேட்டிருந்தார். இதையடுத்து அவர் நாளை தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் இணைகிறார்.

இதற்காக கரூரில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் அவரது ஆதரவாளர்கள் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கு திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்

PREV
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!