போன் சுவிட்ச் ஆப்... தினகரனும் 2 முறை கால் பண்ணாரு எடுக்கல... செந்தில் பாலாஜி திமுகவில் சேருவதை கன்ஃபார்ம் பண்ண வெற்றி...

By sathish kFirst Published Dec 13, 2018, 7:03 PM IST
Highlights

நான் போன் செய்தேன் எடுக்கவில்லை, தினகரனும் இரண்டுமுறை போன் செய்தார் எடுக்கவில்லை என செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதை உறுதிசெய்தார் அமமுக வெற்றிவேல்.

கரூர் செந்தில் பாலாஜி நாளை திமுக.வில் இணைகிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் மற்றும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு செல்ல செந்தில் பாலாஜி தீவிரமாக இருக்கிறார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்டாரத்தில் அதிர்ச்சி பரவியிருக்கிறது.

இந்நிலையில்,  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெற்றிவேல்;  

செந்தில் பாலாஜி திமுகவிற்கு போகிறாரா?

எல்லாமே வெறும் வதந்தி தான்,  நான் எப்படி கேட்க முடியும்? நீங்க போறிங்களான்னு? வெறும் வதந்தி தான, உண்மையா நடந்ததானே?

நீங்கள் அவரிடம் கேட்பதில் என்ன தப்பு?

அப்படியெல்லாம் கேட்க முடியாது, வேண்டுமென்றால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லி கேட்கலாம்.

திமுக முத்த தலைவர் ஆ.ராசாவோடு விமான நிலையத்தில் இருப்பது போண்டா வந்த போட்டோ வந்துருக்கே?

அது பழைய போட்டோ சார்

கரூர் சின்னசாமி அதை உறுதி படுத்துகிறாரே?

ஸ்டாலின் சொல்லணும் அதை, மற்றவர்கள் சொன்னால் நம்பக்கத்தன்மை இல்லை. 

அதேபோல,  தனிப்பட்ட நபரின் முடிவை பற்றி நான்  கேட்பது நாகரிகமாக இருக்காது. அதெப்படி அவர் தனி மனிதன் இல்லையே அவர் அமமுக கட்சியின் நிர்வாகி தானே?

ஆமாம் நிர்வாகிதான், இருந்தாரு இப்பவும் இருக்காரு!

அப்படின்னா 16  ஆம் தேதி வரைக்கும் அமமுகவில் இருப்பாரா? 16 ஆம் தேதி தானே திமுகவில் சேரப்போகிறார்?

அவர் இன்றே சேரப்போகிறார் என செய்தி வந்ததே, அவர் இன்னும் கரூரில் தான் இருக்கிறார். கரூரில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றார்.

அமமுகவில் ஏதாவது பிரச்சனையா? திமுக அதிமுக என கட்சியில் சேருகிறார்கள்?

எங்ககிட்ட கூட திமுக அதிமுக அட்டையை கிழித்துப்போட்டுவிட்டு அமமுகவில் இணைந்த ஆதாரம் இருக்கு? அதெல்லாமா இப்போ முக்கியம் கட்சியை விட்டு போறதும். திரும்போ வந்து பெறுவதும் சகஜம் தானே?

அதை விடுங்க செந்தில் பாலாஜி ஏன் கட்சியை விட்டு போகிறார்? அமமுகவின் எதிர்காலம் என்ன? 

அவர் போகிறாரா என எனக்கு தெரியாது. அவர் போனதுக்கு அப்புறம் தான் நான் என்னுடைய விமர்சனத்தை வைக்க முடியும். 

தொடர்ந்து பேசிய அவர் திமுகவிலிருந்து தலைவர் (MGR) வந்தாரு, அது பெரிய பிரேக், அப்புறம் வைகோ வந்தாரு அது மிகப்பெரிய பிரேக், அதிமுகவில் ஜெ அணி, ஜா அணி தனிப்பட்ட ஒருவர் எடுக்கிற முடிவு அரசியலில் ஒன்னும் பெரியதாக ஆகிவிடாது என கூறினார்.

திமுக தலைவர், வைகோ அதிமுகவில் ஜெ அணி, ஜா அணி என சொல்றிங்க ஆனா அது மிகப்பெரிய காட்சிகள். நீங்கள் கட்சித் தொடங்கிய ஒருவருடத்திலேயே இப்படி நடக்கிறதே? வெறும் 8  மாசம் கூட தாக்குப்பிடிக்க முடியலைன்னா அப்படி என்ன நடக்குது?

அவர் போனால் கவலைப்பட மாட்டிங்களா? 

போகட்டும், நான் ஏன் கவலைப்படணும் அவர் ஏன் நண்பர் தானே? என்றார்.

அவரை கட்சியில் தக்கவைக்க சமரச முயற்சி நடக்கிறதா? 

அவர் போகமாட்டேன் என சொல்லியிருக்கிறார். இது வெறும் வதந்தின்னு தான் சொல்லிருக்காரு. நான் மட்டும் அவரை நண்பரா பாக்கல துணைப்பொதுச்செயலாளர் சகோதரரா பார்க்கிறார் என்றார்.

உங்க நண்பர் தானே எத்தனை நாளாச்சி அவரிடம் பேசி? பத்து நாளாச்சி போன் போட்டேன் போன் சுவிட்ச் ஆப். ஒருமுறை எடுத்தாரு, வாட்ஸ் ஆப் காலில் வருகிறேன் என சொன்னாரு ஆனால் வரல, நான் இன்னும் பேசல, தினகரனும் பேசல இரண்டு முறை கால் பண்ணாரு எடுக்கல, கடைசியாக 5 ஆம் தேதி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தேன் என்றார்.

அப்படியென்றால் செந்தில் பாலாஜி உங்களை வெறுக்கிறாரா?

அப்படியில்ல அவர் இல்லன்னு சொல்லணும், பழனியப்பன் மாதிரி வெளியில் வந்து உண்மையா சொல்லணும் என்றார்.

click me!