சொன்ன தேதியில் ஆட்சியை கலைத்த சந்திரசேகர் ராவ்...! 2 ஆவது முறை பதவியேற்க இது தான் காரணமாம்..!

By thenmozhi gFirst Published Dec 13, 2018, 6:30 PM IST
Highlights

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான், சொன்ன தேதியில் ஆட்சியை கலைத்து விட்டு, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான், சொன்ன தேதியில் ஆட்சியை கலைத்து விட்டு, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரசேகர் ராவ் பொதுவாகவே கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். மேலும், ஜாதகத்திலும் அதிக நாட்டம் கொண்டவர். இவர் ஐதராபாத்தில் இருந்து 100 கி.மீ, தொலைவில் சித்திபெட் நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் மீது அதிக பற்று கொண்டவர். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும், அதற்கு முன் இந்த கோவிலுக்கு சென்று வந்து தான் அந்த காரியத்தில் ஈடுபடுவாராம் இவர்.

மேலும், 1980 ஆம் ஆண்டுகளிலேயே தெலுங்கானா தனி மாநிலம் வேண்டும் என கோரிக்கை வைக்கும் போதும் சரி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சரி இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு பின்னர் தான் கூட்டத்திற்கு கூட செல்வாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு நடக்க இருந்த சட்டசபை தேர்தலை முன் கூடியே வைக்கும் நிலை வந்தால், அது சந்திர சேகர ராவுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக முடிந்து, இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவார் என சிருங்கேரி மடத்தை சேர்ந்த பூஜாரிகள் பானிஷஷாங் சர்மா மற்றும் கோபிகிருஷ்ணா சர்மா தெரிவித்து உள்ளார்.

அதன்படி தான் செப் 6 ஆம் தேதி தான் சட்டசபை கலைக்க வேண்டும் என தேதி குறித்து கொடுத்துள்ளனர். காரணம் அன்றைய தினத்தில் குருபுஷ்ய யோகம் உண்டு என்பதை தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த நாள் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் உள்ள நாள் என்பதால் ஆட்சி கலைப்புக்கு ஏற்ற நாள் என ஜோதிடர் தெரிவித்தபடியே, ராவ் அவர்களும் அறிவிப்பு வெளியிட்டு ஆட்சி கலைப்பு ஏற்பட்டது.

ஆனால் தேர்தல் டிசம்பர் 7 என அறிவித்ததும், அந்த நாள் சந்திர சேகர் ராவுக்கு சாதகமாக இல்லை என்றும் ஆனாலும் வாக்கு எண்ணிக்கை நாள் ராவுக்கு சாதகமாக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர் 

இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதியான இன்று மதியம் 1.34 மணிக்கு சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நேரத்தை குறித்து கொடுத்தது புவனகிரி மாவட்டம், யதாத்ரி நகரில் உள்ள லட்சுமி நரசிம்ம கோவில் பூஜாரி தானாம். இந்த நேரத்தில் பதவி ஏற்பது மேலும் செல்வாக்கை தேடி தருமாம். அதுமட்டுமல்லாமல் இன்று பதவியேற்ற இந்த நேரம் ராஜ யோகம் உடையது என்றும் பூஜாரி தெரிவித்து உள்ளாராம்.

சந்திர சேகர் ராவின் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருந்துள்ளது.

click me!