இபிஎஸ்- ஓபிஎஸ் ஐ விமர்சித்த மாஜி அமைச்சர் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..! அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இராமநாதபுரத்தில் ஒட்டியுள்ள சுவரொட்டியால்  அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள் மற்றும் கட்சியினரிடையே  சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது


அதிமுகவில் அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. கட்சியில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்ற போட்டியால் 4 பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இந்தநிலையில் பாமக  தொடர்பாக சர்ச்சை கருத்தை கூறிய காரணத்தால் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து எந்த வித கருத்துகளும் தெரிவிக்காமல் அமைதி காத்து வரும் அவர்,  அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளில் அதிமுகவினருக்கு கருத்துகள் கூறும் வகையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவார். கடந்த ஆண்டு அன்வர் ராஜா ஒட்டிய போஸ்டரில்,

Latest Videos

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி... பங்கேற்று கண்டு ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

போஸ்டர் ஒட்டிய மாஜி அமைச்சர்

தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி, சிதறி கிடக்கிறது-நாங்கள் பதறித்துடிக்கிறோம். காப்பாற்றுங்கள் என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் முன்னாள்  முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-ஆவது பிறந்த தினம் வருகிற 17-ஆம் தேதி (நாளை ) கொண்டாடப்படவுள்ளது.  இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஒட்டியுள்ள சுவரொட்டியால் அதிமுகவினரிடைய சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... அறிவித்தது போக்குவரத்து காவல்துறை!!

நீதிமன்றங்களில் போராட்டம்

அவர் ஒட்டியுள்ள அந்த சுவரொட்டியில், தலைவா நம் கட்சித் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகிறார்கள். நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம் காப்பாற்றுங்கள் !!!! இப்படிக்கு அன்வர் ராஜா என ஒட்டியுள்ள போஸ்டரால் தற்போது அதிமுகவில் உள்ள  இருதரப்பு  தலைவர்களிடையேயும்  அதிமுகவினரிடையேயும்  சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை..! தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற இபிஎஸ்-ஓபிஎஸ்..! யார் யார் பங்கேற்கிறார்கள்..?

click me!