ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை..! தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற இபிஎஸ்-ஓபிஎஸ்..! யார் யார் பங்கேற்கிறார்கள்..?

தேர்தல் ஆணையத்தின் சார்பாக இன்று நடைபெறவுள்ள ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி சார்பாக நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


ரிமோட் வாக்குப்பதிவு

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க வகை செய்யும் வகையில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. பொதுவாக மாநிலங்களின் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் குறிப்பாக தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சென்று திரும்புகிற சூழ்நிலை இருந்து வருகிறது.

Latest Videos

TN BJP: தைரியமான பெண்! நம்பிக்கை முக்கியம்.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த வானதி சீனிவாசன்!

அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

தற்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க ஜனவரி 16-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பும் விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது.

ஓபிஎஸ்- இபிஎஸ் அணி பங்கேற்பு

இந்தநிலையில் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிமுக சார்பாக பங்கேற்குமாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பதவி இல்லையென இபிஎஸ் அணியினர் திருப்பி அனுப்பியிருந்தனர். இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த பட்டியல் அடிப்படையிலேயே அழைப்பு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் அணி சார்பாக தம்பிதுரை மற்றும் சந்திரேசகர் பங்கேற்கின்றனர். ஓபிஎஸ் அணி சார்பாக சுப்புரத்தின் மற்றும் பிரகாஷ் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. திமுகவில் இருந்து நீக்கம்!! துரைமுருகன் அதிரடி!

click me!