விரக்தியில் செங்கோட்டையன் …. தினகரன் அணிக்கு மாற திட்டமா ?

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
விரக்தியில் செங்கோட்டையன் …. தினகரன் அணிக்கு மாற திட்டமா ?

சுருக்கம்

senkottayan will goes to ttv dinakaran group

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக  சசிகலாவால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையனின் பதவியை பறித்து ஓபிஎஸ்சிடம் வழங்கப்பட்டுதால் விரக்தியில் இருக்கும் செங்கோட்டையன்  தினகரன் அணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., கடந்த ஆண்டு சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்தபோது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டார்.

அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், செங்கோட்டையனை அழைத்து அவை முன்னவர் பதவியை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் இணைந்த நிலையிலும்  , வரும் 8-ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையிலும், அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தினகரன் தொடர்ந்து பேசி வருகிறார். தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என தெரிவித்தார்.

ஓபிஎஸ்சுக்கு அவை முன்னவர் பதவி கொடுக்கப்பட்டது செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காகத்தான். ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இணைந்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தனது பதவி பறிப்பால் மனமுடைந்த நிலையில் இருக்கும் செங்கோட்டையன் விரைவில்  தினகரன் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

கனிமக்கொள்ளையை தட்டிக்கேட்ட செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. திமுக MLA கைதாகணும்.. எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
ராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!