ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதா? எடப்பாடிக்கு எதிராக களமிறங்கும் செங்கோட்டையன்!

 
Published : May 06, 2017, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதா?  எடப்பாடிக்கு எதிராக களமிறங்கும் செங்கோட்டையன்!

சுருக்கம்

Senkottaiyan raised his voice against Edapadi Palanisami

அதிமுகவில் செங்கோட்டையனை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதா தலைமையில் மூத்த கட்சி நிர்வாகிகளில் ஒருவர்.

ஆனால், அவரது போறாத காலம், அமைச்சர் பதவி, மற்றும் கட்சி பதவியை பறித்து ஜெயலலிதாவே ஓரம் காட்டும் நிலைக்கு ஆளானார்.

அதன் பிறகு, சசிகலா வந்ததும், தமக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கல்வி அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது.

ஆனாலும், அதன் மூலம், அவர் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. அந்த அளவுக்கு முதல்வர் எடப்பாடி அவரை உதாசீனப்படுத்தி வருகிறார். 

தினகரன் சிறை செல்லும் வரை ஓரளவு மரியாதையுடன் இருந்த அவருக்கு, தற்போது செல்வாக்கு மீண்டும் குறைய ஆரம்பித்து விட்டது.

சாதாரண நிலையில் இருந்த எடப்பாடி, எம்.எல்.ஏ, அமைச்சர் என உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் செங்கோட்டையன்.

கொங்கு சமூக உணர்வின் அடிப்படையில், எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தார் செங்கோட்டையன். ஆனால் வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல, செங்கோட்டையனை அரசியலை விட்டே ஒழித்தார் எடப்பாடி. 

மேலும், ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்று விடாமல் இருக்குமாறும் பார்த்து கொண்டவர் எடப்பாடி.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவின் முயற்சியால் மீண்டும் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற செங்கோட்டையன், முதல்வரான எடப்பாடிக்கு அடுத்த நிலையிலேயே இருக்கும் படி அமைந்து விட்டது.

ஆனாலும், பொறுமையுடன் இருந்து வந்த செங்கோட்டையனுக்கு, தினகரன் சிறைக்கு சென்ற பின்னர், எடப்பாடியால் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மதுரையில் நேற்று நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்க விரும்பினார் செங்கோட்டையன். ஆனால், நீங்கள் வரவேண்டாம், நான் மட்டுமே செல்கிறேன் என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம் எடப்பாடி.

இது அவருக்கு, மிகவும் உறுத்தலாக இருந்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் நேற்று நடந்த மே தின பொது கூட்டத்தில் கலந்து கொண்ட செங்கோட்டையனின் முகம் மிகவும் வாடி போய் இருந்திருக்கிறது.

கூட்டம் முடிந்த பிறகும், மிகவும் விரக்தியுடன் காணப்பட்ட செங்கோட்டையனிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் அக்கறையுடன் விசாரித்துள்ளனர்.

அதற்கு, ஜெயலலிதாவை விட மிக மோசமாக தம்மை எடப்பாடி உதாசீனப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டுள்ளார்.

நான் இல்லை என்றால், எடப்பாடி அரசியலுக்கு வந்து, இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்திருக்க முடியுமா? 

ஏணியாக இருந்த என்னையே, எட்டி உதைப்பது போல் அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன என்று மிகவும் வேதனை அடைந்துள்ளார் செங்கோட்டையன்.

இதையடுத்து, எடப்பாடிக்கு எதிராக களமிறங்கும் முயற்சியில் செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!