"ஸ்டாலினை முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பன்னீர்" - திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

 
Published : May 06, 2017, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"ஸ்டாலினை முதல்வராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பன்னீர்" - திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

சுருக்கம்

ops trying to make stalin as CM says srinivasan

ஸ்டாலினை முதல்வராக்க பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார் என்று எடப்பாடி அணியை சேர்ந்தவரும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று சேலத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  செய்தியாளர்களிடம் கூறுகையில்; தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் பன்னீரும்  ஸ்டாலினும் உள்ளனர்.

ஓ.பி.எஸ் அணியினர் வைத்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். ஆனால், ஏன் அந்த அணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என எங்களுக்குத் தெரியிவில்லை. மு.க.ஸ்டாலினை முதல்வராக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார்.

தமிழகத்தில் விலைவாசி உயரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளாக இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தேவைப்படும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!