கொடநாடு வழக்கில் சசிகலா தினகரனுக்கு நெருக்கடி: விசாரணை நடத்த போலீசார் முடிவு!

 
Published : May 06, 2017, 04:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
கொடநாடு வழக்கில் சசிகலா தினகரனுக்கு நெருக்கடி: விசாரணை நடத்த போலீசார் முடிவு!

சுருக்கம்

trouble for sasikala and dinakaran in kodanadu case

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலா மற்றும் தினகரனிடம் விசாரணை  நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால், சிறையில் உள்ள அவர்களுக்கு மேலும் நெருக்கடி முற்றி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 24 ம் தேதி, மூன்று கார்களில் முகமூடி அணிந்த 11 பேர் கொண்ட கும் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை அடித்து கொன்றுவிட்டு அங்கிருந்த சில பொருட்களை கொள்ளை அடித்து சென்றது.

அந்த பங்களாவில் இருந்தது என்னவென்று யாருக்கும் தெரியாததால், கொள்ளை போன பொருட்கள் பற்றிய தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.

ஆனால், கோடிக்கணக்கான பணமும், பல முக்கிய ஆவணங்களும்   மூன்று சூட்கேஸ்களில் வைத்து அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு தெரியாமல் மூன்று அமைச்சர்கள்  கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தையும், சொத்துக்களின் ஆவணங்களையும், அவர் மிரட்டி பிடுங்கி, அதை கொடநாடு பங்களாவில் வைத்திருந்தார் என்றும், கொள்ளையர்கள் அந்த பணத்தையும், ஆவணங்களையும் கொள்ளை அடித்து சென்றனர் என்றும் மற்றொரு தகவலும் வெளியானது.

ஆனால், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக  கருதப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், அடுத்த சில நாட்களில், மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

மற்றொருவரான கேரளாவை சேர்ந்த சயான் என்பவரும் கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், போலீசாரின் சந்தேகம் வலுத்துள்ளது.

அத்துடன், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அவரது சொத்துக்கள் அனைத்தும், சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இதனால், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, சசிகலா மற்றும் தினகரனிடம் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையிலும், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் திகார் சிறையிலும் தற்போது உள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கிலும் போலீசார், சசிகலா மற்றும் தினகரனை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதால், அவர்களுக்கு மேலும் நெருக்கடி முற்றி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!