
அரசியல்வாதிகளின் அதிரடி பல்டிகளை வைத்துதான், நடிகர்கள் நகைச்சுவை காட்சிகளை அமைக்கிறார்களா? அல்லது, நடிகர்களின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து அரசியல்வாதிகள் டைவ் அடிக்கிறார்களா என்று தெரிய வில்லை.
அந்த அளவுக்கு, அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்துக்களை பல்வேறு நகைச்சுவை காட்சிகளுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர் நமது நெட்டிசன்கள்.
தினகரனுக்கு ஆதரவான கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நேரம் ஒதுக்கி கூட வந்து பார்க்காத "சண்டாளன்" பன்னீரை என்று வசை பாடினார்.
ஆனால், சில நாட்கள் கழித்து, இரு அணிகளும் இணையும் இணக்கமான சூழல் நிலவிய பொது, "அண்ணன் ஓ.பி.எஸ்" என்று பாசம் பொங்க பேச ஆரம்பித்தார்.
வளர்மதியை பொறுத்தவரை பன்னீர்செல்வம், போன மாசம் "சண்டாளன்", இந்த மாசம் "அண்ணன்". ஏனென்றால், அது போன மாசம். இது இந்த மாசம். அது" வேற வாய்", இது "நாற வாய்".
இதை எல்லாம் தொகுத்து, இடையில் வடிவேல் காமெடி, விஜயகாந்த் பேச்சு என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கிய அந்த "நக்கல் நையாண்டி லொள்ளு" வீடியோ வலை தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.