"2021-ல் தான் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்" - அடித்துக் கூறும் அமைச்சர் ஜெயகுமார்

Asianet News Tamil  
Published : May 06, 2017, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"2021-ல் தான் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்" - அடித்துக் கூறும் அமைச்சர் ஜெயகுமார்

சுருக்கம்

jayakumar pressmeet about TN election

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் 2021 ஆம் ஆண்டுதான் தேர்தல் நடைபெறும் என்றும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என ஓபிஎஸ் பேசியிருப்பது விஷமத்தனமானது என ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தலுக்கும் முன்னதாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

ஓபிஎஸ்ன் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 சதவீதம் பேரை கொண்ட ஓபிஎஸ் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள் என்றும் . அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக அரசை ஓபிஎஸ் விமர்சித்து வருவதாக தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் ஆட்சி அடுத்த 4 ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் வரும்  2021ல் தான் நடைபெறும் என்றும் அடித்துக் கூறினார்.

ஜெயலலிதாவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அவரின் கனவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

அதே நேரத்தில்  ஓபிஎஸ் பேச்சு ஒருபக்கம் இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கான  கதவுகள் அவருக்காக திறந்தே வைக்கப்பட்டுள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!