டெல்டா பகுதியில் உள்ள காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.. தமிழக அரசு உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published May 26, 2021, 12:15 PM IST
Highlights

டெல்டா பகுதியில் உள்ள காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்பணிக்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டும் வரும் நிலையில் இத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

டெல்டா பகுதியில் உள்ள காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்பணிக்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டும் வரும் நிலையில் இத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வரும் அதே வேளையில், அரசு இயந்திரத்தை வேகப்படுத்தும் நோக்கில் அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இதுவரை சுமார் 21 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வனத் துறை செயலாளராக சுப்ரியா சாஹூ, ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக கோபால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் கால்வாய்களை தூர்வாரும் பணிக்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிரதீப் யாதவ், திருவாரூர் மாவட்டத்திற்கு கோபால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அபூர்வா, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிர்லோஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் தூர்வாரும் பணிகள் தொடர்பான அறிக்கையை அவ்வப்போது தலைமைச் செயலாளரிடம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

click me!