தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு காணொளி வாயிலாக மருத்துவ ஆலோசனை. ககன் தீப் சிங் பேடி அதிரடி.

Published : May 26, 2021, 11:46 AM IST
தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு காணொளி வாயிலாக மருத்துவ ஆலோசனை. ககன் தீப் சிங் பேடி அதிரடி.

சுருக்கம்

தொலைப்பேசியில் கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்க மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டு கட்டுபாட்டு அறையும் இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காணொளி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தொடர்பான மருந்துவர்கள் ஆலோசனைகளை காணொளி வாயிலாக பெறும் சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பினால் சுமார் 48 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்   சுமார் 35 ஆயிரம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

மண்டல வாரியாக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கப் படுகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு தொலைப்பேசியில் கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்க மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டு கட்டுபாட்டு அறையும் இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காணொளி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக 94983 46510 , 94983 46511, 94983 46512 , 94983 46513, 94983 46914 என்ற வாட்ஸ்ஆப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டுத்தனிமையில் உள்ளவர்கள் மற்றும் இதர கொரோனா நோயாளிகளும் இந்த எண்களை தொடர்புக் கொண்டு காணொளியில்  மருத்துவ ஆலோசனைகளை பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!