தாறுமாறா இருக்கணும்... தமிழகமே திரும்பிப் பார்க்கணும்! அதிமுக அமமுகவை அலறவிட செந்தில்பாலாஜி ஸ்கெட்ச்

Published : Dec 17, 2018, 12:30 PM IST
தாறுமாறா இருக்கணும்... தமிழகமே திரும்பிப் பார்க்கணும்! அதிமுக அமமுகவை அலறவிட செந்தில்பாலாஜி ஸ்கெட்ச்

சுருக்கம்

மிகவும் சிம்பிளாக நடந்த இணைப்பு விழா தனது மாவட்டத்தில் பிரமாண்டமாக இருக்கணும், நாம நடத்தும் இந்த விழா தமிழகமே திரும்பிப்பார்க்கு வண்ணம் இருக்கணும் என செந்தில் பாலாஜி பிளான் போட்டுள்ளாராம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி  கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திமுகவில் தனது சகாக்களின் படையோடு திமுகவில் இணைந்தார்.

ஆதரவாளர்களுடன் சிம்பிளாக கட்சியில் இணைந்துவிட்டு,  கரூரில் தலைவரை வெச்சு ஒரு பிரமாண்ட கூட்டம் கூட்டம் நடத்திடலாம், அது வெறும் கூட்டமாக இருக்கக்கூடாது மாநாடு மாதிரி பிரமாண்டமாக இருக்கணும், தாறுமாறா மிரட்டணும், நாம் நடத்தும் இந்த கூட்டம் தமிழகமே திரும்பிப் பார்க்கணும் அப்படியான ஒரு விழாவா இருக்கணும் என தனது ஆதரவாளர்களுக்கு சொல்லியிருக்கிறாராம். செந்தில் பாலாஜியின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து தந்து ஆதரவாளர்கள் அடுத்த கட்டப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, நடக்கப்போகும் இந்த இந்த பிரமாண்ட கூட்டம் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் துணை சபாநாயகர் தம்பி துரை இருவருக்கும் டஃப் பைட் கொடுக்கவே இந்த ஏற்பாடு என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி தனது ஆஸ்தான ஜோதிடரிடம் இது சம்பந்தமாகப் பேச, அவரும்,  நல்ல முகூர்த்த  நாட்களை குறித்துக் கொடுத்துள்ளாராம்’, இதனையடுத்து, ஸ்டாலினிடம் எந்த தேதியில் கூட்டம் நடத்தலாம் என கேட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்டாலின் ஒரு தேதியை சொன்னதும், பிரமாண்ட விழாவிற்கான ஏற்பாடு தீவிரமடையும் என சொல்லப்படுகிறது.  ஏற்கனவே ஜோதிடர் குறித்துக் கொடுத்த அதே நாளில் திமுகவில் இணைந்தார். 

இந்த பிரமாண்ட விழாவில், செந்தில் பாலாஜியை கரூர் மாவட்டச் செயலாளராக  அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாகவே இருக்கிறது. அதைச் சரிசெய்து திமுகவின் வலிமையைக்  கூட்ட நினைக்கும் செந்தில் பாலாஜி, அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என திமுகவில் இணைவதற்கு முன்பே சொல்லியிருந்ததால், கொங்கு மண்டலத்தில் இனி பாலாஜி கொடியே பறக்கும் என சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!